Total Pageviews

Tuesday, February 5, 2013

ம(னி)தம் வெறியெனக்கு




''ஆதிபகவன்'' படத்திற்கு 
இந்து அமைப்பு எதிர்ப்பாம்....!
''கடல்'' படத்திற்கு 
கிறித்துவ அமைப்பு எதிர்ப்பாம்....!
''சிங்கம்- 2'' படத்திற்கு 
மீண்டும் முஸ்லீம் அமைப்பு எதிர்ப்பாம்...!
காவிரி பிரச்சனையில் 
காட்டாதுன்  அக்கறையை...
முல்லை பெரியாற்றில் 
முட்டாதுன் மூலையை...
இருண்ட தமிழகத்திற்கு
எட்டதுன் வேகத்தை...
கட்டிய மனைவியிடம் 
காட்டதுன் மோகத்தை...
...........
காட்டி இருக்கிறாயே 
ஒரு கூத்தாடியிடம்....
இதுதான் 
உன் மதம் கற்பித்ததா...?
இதுதான்
உன் மத அடையாளன் சொல்லிகொடுத்தானா...?
அட ஈனன்களே...
திரைப்படமென்பது 
கற்பனையானது...
உனது மதம்தான் 
கற்பனை இல்லையென்று 
கங்கணம் கட்டிக்கொண்டு 
திரிகிறாயே....
பின்னே எப்படியடா...
கற்பனையான திரைப்படத்தில் 
கற்பனையற்ற உன் மதத்தை 
கொச்சைப்படுத்த முடியும்...
மதவெறி பிடித்து 
மதம் செய்து, பரப்பும் மனிதனே...
நீ என்று ம(னி)தம் செய்யப்போகிறாய்...?

Post Comment

Tuesday, November 20, 2012

கள்ளி.

Post Comment

Tuesday, November 13, 2012

கட...வுள்

Post Comment

தமிழ நாய் பிறந்தேன்

Post Comment

பொம்மை

Post Comment