Total Pageviews

Tuesday, November 20, 2012

கள்ளி.

Post Comment

Tuesday, November 13, 2012

கட...வுள்

Post Comment

தமிழ நாய் பிறந்தேன்

Post Comment

பொம்மை

Post Comment

Saturday, April 21, 2012

பேருந்து நிறுத்தம்

Post Comment

கற்பனை

Post Comment

Sunday, April 15, 2012

மனிதனாக

Post Comment

வெட்டுபவனை வெட்டுவேன்

கையை வெட்டியவனுக்கு 
கனி கொடுக்க நான் 
மரமல்ல....
மனிதன்..
வெட்டுபவனை வெட்டுவேன் 
சுட்டவனை சுடுவேன்...
திட்டியவனை திட்டுவேன்..
பட்ட காயத்தை மறவேன்...
அறையை வாங்கியதும்
அடுத்த கன்னத்தை திருப்பி காட்ட 
நான் யேசுவுமல்ல...
அரை நிர்வாணமாக்கி,
கேவலபடுத்தி சிரித்தால்,
சாந்தமாக போக
நான் காந்தியுமல்ல...
நான் 
வீரத்திற்கு விளக்கம் கொடுத்த
பிரபாகரனின் தம்பி(கை)
அவனே என் நம்பிக்கை... 
நீ சிங்கமாக வந்தாலும்
நீ சிறுத்தையோடு வந்தாலும்...
புலியாக நின்று 
உன்னை எதிர்கொள்வேன்...! 


Post Comment

Saturday, April 14, 2012

டேய்...ராஜபக்சே

Post Comment

Thursday, April 12, 2012

உன்னை பார்த்ததிலிருந்து...!


Post Comment

Friday, April 6, 2012

மரம் வளர்ப்போம்

மீசை வளர்த்து,
தாடி எடுத்தால்
இந்துவாம்...!
தாடி வளர்த்து 
மீசை எடுத்தால் 
முஷ்லீமாம்...!
மீசையையும் தாடியையும் 
சேர்த்து எடுத்தால் 
கிறிஷ்டியனாம்..!
அட மானகெட்ட 
மனிதா...
மயிரை வளர்த்தென்ன 
மதம் வளர்த்தாய்...!
உன்னால் முடிந்தால் 
மரம் வளர்த்து 
மதம் வளர்த்து பார்...!



Post Comment

Tuesday, April 3, 2012

சரியா...? தப்பா..?


தப்பாம்....
செய்யக்கூடாதாம்,
செய்தால் தப்பாம்...
ஒருநாள் தெரியாமல் 
செய்துவிட்டேன் தப்பை...
ஊரே அல்லோலப்பட்டது
"தப்பு செய்துவிட்டானே" என்று...!

முளச்சி மூணு எல விடல 
இவன் செஞ்ச வேலையை பார்த்தியா...
என்று காதும் காதும் 
கடித்துக்கொண்டார்கள்....
சில நாட்களுக்குப்பின்...
பத்திரிகை அடித்தார்கள்,
பந்தி பரிமாறினார்கள்,
வேட்டியையும்,
சேலையையும் புதுசாக 
உடுத்துங்கள் என்றார்கள்... 
கட்டிலை அலங்கரித்தார்கள்...
கதவை மூட சொன்னார்கள்...
...........
...........
தப்பு செய்ய சொன்னார்கள்,
தப்பு செய்யக்கூடாது என்று 
சொன்னவர்களே...!
தப்பு என்றோம்,
செய்யாவிட்டால் தான் தப்பு என்றார்கள்...!
"அதெப்படி...?
ஒரே செயல்,
காலம் தான் வேறு,
என்ன...
ஒரு வார இடைவெளிதான்...
அப்போ செய்தால் தப்பு... 
இப்போ செய்தால் தப்பும் சரியா...?"
என்று யோசித்துக்கொண்டே
செய்தோம் தப்பை
சரியாக...
இப்போது நீங்ளே சொல்லுங்கள்
நான் செய்தது...
சரியா...?
தப்பா..?








Post Comment

காதலியை தவிர


ஷூ, 
சோப்,
பேஸ்ட்,
பிரஷ்,
பவுடர், 
சென்ட்,
செல்போன்,
இப்படி எல்லவாவற்றையுமே
வருஷத்திற்கொரு முறை 
கம்பெனியை மாற்றும் 
பழக்கமுடையவன் நான்,
காதலியை தவிர...!


Post Comment

Saturday, March 31, 2012

ஆண்டவா... நீ எங்கே இருக்கிறாய்...?



ஆண்டவா 
நீ எங்கே இருக்கிறாய்...?
"நீ தூணிலும் இருக்கிறாய்,
துரும்பிலும் இருக்கிறாய்,"
என்கிறார்கள் எம் பெரியோர்கள்...!
தூணும், துரும்பும் 
உயிரில்லாததுக்கு 
உதாரணம் என்று 
உமக்கு தெரியாதா...?
அப்படி என்றால்,
உனக்கு உயிரில்லையா...?
உயிரில்லாத நீ 
உயிருள்ள எம் மக்களை 
உய்வினையிலிருந்து எப்படி 
காக்கப்போகிறாய்....?

உன்னை நேரில் சந்திக்க 
வேண்டுமென்றால் 
எந்த நாட்டிற்கு வர வேண்டும்...?
என்ன கொண்டு வரவேண்டும்...?
திருப்பதிக்கு போவதைபோல் 
தங்கம் கொண்டு வரவேண்டுமா...?
திருத்தணிக்கு போய் 
திரும்புவதைபோல் 
மொட்டைபோட்டு வரவேண்டுமா...?
தரிசலத்துக்கு போவதைப்போல 
கறுப்பாடை அணிந்து வரவேண்டுமா...?
வேளாங்கண்ணிக்கு போவதைப்போல 
கால்கடந்து வரவேண்டுமா...?
மேல்மருவத்தூர் செல்வதைப்போல
கன்னிபெண்ணாக வரவேண்டுமா...?
எப்படி வந்தால்,
எங்கே வந்தால்
உன்னை சந்திக்க முடியும் என்று 
என்னால் சிந்திக்க முடியவில்லை....
ஆண்டவா...?

நீ 
ஆன்மீகவாதியா...?
இல்லை... 
நாத்திகவாதியா...?
நீ  
ஆண்.மீகவாதியா...?
இல்லை...  
பெண்மீகவாதியா...?
நீ  
அரசியல்வாதியா...?
இல்லை...  
சுயநலவாதியா...?
நீ 
யதார்த்தவாதியா....? 
இல்லை...  
எல்லோருக்கும் வியாதியா...?
சொல் ஆண்டவா... சொல்.
........
உனக்கு தெரியுமா...?
எம் பெரியோர்கள் 
கழுதையின் புகைப்படத்தை 
வீட்டு வாசலில் மாட்டி 
கடவுள் என்று கோஷமிடுகிறார்கள்...
வேலை செய்யும் 
தோட்டக்காரனை 
வாசலுக்கு வெளியே நிற்கவைத்து 
கழுதை என்று திட்டுகிறார்கள்...

கடவுளே...
"என்பிள்ளைக்கு 
உயிர்கொடு" என்கிறான்...
உயிரே இல்லாத 
கல்லை பார்த்து...!
கேட்டால்...
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்..
என்கிறான்...

தன் வீட்டில் தொலைத்த 
பணத்தை...
பக்கத்து வீட்டில் போய் 
தேடுகிறான்...
கேட்டால்...
நம்பிக்கை இல்லை 
பக்கத்து வீட்டுக்காரன்மீது 
என்கிறான்...

குழந்தைகள் ஏராளம் 
என்றாலும்...
குழந்தையே இல்லை 
என்றாலும்....
நீ மட்டுமே கள்ளப்புஷனாக்கப்படுகிறாய் 
இங்குள்ள மனைவிமார்களுக்கெல்லாம்,
"எல்லாம் அவன் செயல்"
என்று கணவன்மார்கள் மேலே
கை தூக்கி சொல்லும் 
ஒவ்வொரு முறையும்...! 

ஆண்டவா...
பொய், 
புரட்டு, 
களவு  ,
கல்லாமை,
கற்பழிப்பு,
தீவிரவாதம்,
தீண்டாமை,
கோபம்,
கொலை,
இப்படி எல்லா பழிச்செயல்களுக்கும் 
இங்கே மனிதன் உன்னை 
"கை காட்டி"யாக்கிகொண்டிருக்கிறான்...!

அப்படி என்றால் 
பழிச்செயல்களின் 
மொத்த உருவம் நீதானா...?
வேண்டாம் ஆண்டவா வேண்டாம்,
இந்த பழிச்சொல்...!

வேண்டும் ஆண்டவா வேண்டும்
இந்த  பூமிக்கு நீ வர வேண்டும்,

போதும் ஆண்டவா
போதும்...
இங்கே 
மனிதன் மாமனிதனாக்கபட வேண்டாம் 
மனிதன்...
மனிதனாக இருந்தாலே போதுமானது...!







Post Comment

கிளி

Post Comment

Tuesday, March 27, 2012

வாழ்க்கை

Post Comment

Friday, March 23, 2012

தேசத்துரோகி

Post Comment

Sunday, March 18, 2012

தொ(ல்)லைபேசி



 எங்கோ,
தொலைதூரத்தில் இருப்பவர்களிடம் 
தொலைபேசியில்...
தேவை இல்லாமலேயே 
பேசும் மனிதா...
தேவை இருந்தும் 
அருகில் இருப்பவரிடம் 
பேச மறுக்கிறாயே ஏன்...? 



Post Comment

Thursday, March 15, 2012

பாத்ரூம்



 காம்ப்பவுண்ட் கதவு முதல் 
ஹால் கதவு வரை 
எத்தனை கதவுகள் 
மூடி இருந்தாலும் 
பாத்ரூம் கதவை 
மூடிக்கொண்டு குளிப்பாள் பெண்...!
காம்ப்பவுண்ட் கதவு முதல் 
ஹால் கதவு வரை 
எத்தனை கதவுகள் 
திறந்திருந்தாலும் 
பாத்ரூம் கதவை 
திறந்துகொண்டு குளிப்பான் ஆண்...!

Post Comment

மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!



பெண் பிறந்ததும் திருவிழா...
"சிறுமியாய்" இருக்கையில் 
காதுகுத்து விழா... 
"வயசுக்கு" வந்து விட்டால்,
குடிசைக்குள் விழா... 
கொஞ்சம் நாள் கழித்து 
"மஞ்சள் நீராட்டு" விழா... 
குமரியாய் இருக்கையில் 
"திருமண" விழா...
கருத்தரித்தால் 
"வலையகாப்பு"  விழா...
குழந்தை பிறந்தால் 
"தாய்வீடு" விழா...
இத்தனை விழாக்கள் 
போதாதென்று... 
"மதர்ஸ் டே" யாம்
"மகளிர் தினமாம்..."
இதை நினைக்கும் பொது 
"நான் நின்னா பொதுக்கூட்டம்...
நடந்தா ஊர்வலம் 
படுத்தா பந்த்..." என்கிற 
கானின் வரிகள்தான் என்னை
கடந்து செல்கிறது....! 
பெண் வயசுக்கு வருவதும் 
ஆணுக்காகத்தான்...!
வலையகாப்பு நடத்துவதும் 
ஆணால் தான் என்பதை மறந்த 
இந்த சமூகத்தை எந்த ஆணும் 
குறைகூறவில்லை....
என்னைக்கு நாம் வயசுக்கு வந்தோம் என்று
இன்னும் சிந்தித்த நிலையில்,
ஆண்கள் எல்லோரும் இன்னும் அபலையாக...!
.....................
.....................
என்னதான் இருந்தாலும்,
என்னை பெற்றேடுத்தவளும் பெண்,
என்னுடன் பிறந்தவளும் பெண்,
என் மோட்டார் பைக்கின் பின் சீட் 
காத்திருப்பதும் ஒரு பெண்ணுக்காகத்தான்....!
ஆகையால் சொல்கிறேன்...
"மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!"













Post Comment

Sunday, March 4, 2012

காதலியல்.



 

Post Comment

Wednesday, February 22, 2012

மதம் பிடித்த மானிடா...







மதம் பிடித்த 
மானிடா... 
மதத்தை எவனடா
கண்டுபிடித்தான்...
மானிடா...? 
மதம் கண்டுபிடித்தவன்
மட்டும் கிடைத்தால்
மதம்கொண்ட யானையைக்கொண்டு
சதம் அடிக்கத்தான்
தோன்றுகிறதெனக்கு....!
"மதம் என்றால் என்னடா...?"
என்று தினம் நீ கேளடா...
"என்ன மதம்...?"
என்று உன்னை கேட்பவனிடம்...!
நீ 
உருவானதுபோல்தான்
நானும் உருவானேன்...!
நீ வந்த வழியில்தான்
நானும் வந்தேன்...!
நீ சிரிப்பது வாயால் என்றால்
நானும்தான்...!
நீ ருசிப்பது நாக்கால் என்றால்
நானும்தான்...!
உனக்கு சுவாச வழி நாசி என்றால்
எனக்கும்தான்...!
உனக்கு குருதி சிவப்பென்றால்
எனக்கும்தான்...!
உனக்கு மறதி உண்டென்றால்
எனக்கும்தான்...!
உனக்கு நிர்வாணம் சபலமென்றால்
எனக்கும்தான்...!
உனக்கு மரண பயம்  உண்டென்றால்
எனக்கும்தான்...!
உன்னை நீல வானம் பிடிக்குமென்றால்
என்னையும்தான்...!
நமக்கு
காதலும் ஒன்றுதான்,
காமமும் ஒன்றுதான்,
ஏன்...?
கடவுள்கூட ஒன்றுதான்,
நாமிருவரும் இறந்து,
புதைத்தால்...
மண்ணில்தான்...!
எரித்தால்... 
நெருப்பில்தான்...!
இப்போது நீ சொல்லடா
எந்த விதத்தில்
நீ உயர்ந்தாய்...?
எந்த விதத்தில்
நான் தாழ்ந்தேன்...?
என்கேள்விக்கு பதில் சொல்
இல்லையேல்...
மனித மதம்
ஒன்றே என்று நீ
உரக்க சொல்...!




Post Comment

Monday, January 30, 2012

படித்ததில் பிடித்தது....





திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
>
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
>
த்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
>
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
>
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு...ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
>
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
>
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
>
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
>
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
>
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
>
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
>
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
>
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
>
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
>
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
>
அழுவதும்... அணைப்பதும்...
>
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
>
இடைகிள்ளி... நகை சொல்லி...
>
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
>
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
>
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
>
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
>
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> 12
வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
> 4
வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
> 2
வருடமொருமுறை கணவன் ...
>
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
>
இது வரமா ..? சாபமா...?
>
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
>
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
>
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
>
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
>
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
>
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
>
தேவை அறிந்து... சேவை புரிந்து...
>
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
>
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
>
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
>
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
>
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
>
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
>
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
>
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
>
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
>
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
>
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
>
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
>
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
>
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
>
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
>
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
>
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
>
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
>
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
>
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
>
கிழித்துவிடு!
>
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
> (
இல்லையேல் விவாக ரத்து




Post Comment