Total Pageviews

Saturday, March 31, 2012

ஆண்டவா... நீ எங்கே இருக்கிறாய்...?



ஆண்டவா 
நீ எங்கே இருக்கிறாய்...?
"நீ தூணிலும் இருக்கிறாய்,
துரும்பிலும் இருக்கிறாய்,"
என்கிறார்கள் எம் பெரியோர்கள்...!
தூணும், துரும்பும் 
உயிரில்லாததுக்கு 
உதாரணம் என்று 
உமக்கு தெரியாதா...?
அப்படி என்றால்,
உனக்கு உயிரில்லையா...?
உயிரில்லாத நீ 
உயிருள்ள எம் மக்களை 
உய்வினையிலிருந்து எப்படி 
காக்கப்போகிறாய்....?

உன்னை நேரில் சந்திக்க 
வேண்டுமென்றால் 
எந்த நாட்டிற்கு வர வேண்டும்...?
என்ன கொண்டு வரவேண்டும்...?
திருப்பதிக்கு போவதைபோல் 
தங்கம் கொண்டு வரவேண்டுமா...?
திருத்தணிக்கு போய் 
திரும்புவதைபோல் 
மொட்டைபோட்டு வரவேண்டுமா...?
தரிசலத்துக்கு போவதைப்போல 
கறுப்பாடை அணிந்து வரவேண்டுமா...?
வேளாங்கண்ணிக்கு போவதைப்போல 
கால்கடந்து வரவேண்டுமா...?
மேல்மருவத்தூர் செல்வதைப்போல
கன்னிபெண்ணாக வரவேண்டுமா...?
எப்படி வந்தால்,
எங்கே வந்தால்
உன்னை சந்திக்க முடியும் என்று 
என்னால் சிந்திக்க முடியவில்லை....
ஆண்டவா...?

நீ 
ஆன்மீகவாதியா...?
இல்லை... 
நாத்திகவாதியா...?
நீ  
ஆண்.மீகவாதியா...?
இல்லை...  
பெண்மீகவாதியா...?
நீ  
அரசியல்வாதியா...?
இல்லை...  
சுயநலவாதியா...?
நீ 
யதார்த்தவாதியா....? 
இல்லை...  
எல்லோருக்கும் வியாதியா...?
சொல் ஆண்டவா... சொல்.
........
உனக்கு தெரியுமா...?
எம் பெரியோர்கள் 
கழுதையின் புகைப்படத்தை 
வீட்டு வாசலில் மாட்டி 
கடவுள் என்று கோஷமிடுகிறார்கள்...
வேலை செய்யும் 
தோட்டக்காரனை 
வாசலுக்கு வெளியே நிற்கவைத்து 
கழுதை என்று திட்டுகிறார்கள்...

கடவுளே...
"என்பிள்ளைக்கு 
உயிர்கொடு" என்கிறான்...
உயிரே இல்லாத 
கல்லை பார்த்து...!
கேட்டால்...
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்..
என்கிறான்...

தன் வீட்டில் தொலைத்த 
பணத்தை...
பக்கத்து வீட்டில் போய் 
தேடுகிறான்...
கேட்டால்...
நம்பிக்கை இல்லை 
பக்கத்து வீட்டுக்காரன்மீது 
என்கிறான்...

குழந்தைகள் ஏராளம் 
என்றாலும்...
குழந்தையே இல்லை 
என்றாலும்....
நீ மட்டுமே கள்ளப்புஷனாக்கப்படுகிறாய் 
இங்குள்ள மனைவிமார்களுக்கெல்லாம்,
"எல்லாம் அவன் செயல்"
என்று கணவன்மார்கள் மேலே
கை தூக்கி சொல்லும் 
ஒவ்வொரு முறையும்...! 

ஆண்டவா...
பொய், 
புரட்டு, 
களவு  ,
கல்லாமை,
கற்பழிப்பு,
தீவிரவாதம்,
தீண்டாமை,
கோபம்,
கொலை,
இப்படி எல்லா பழிச்செயல்களுக்கும் 
இங்கே மனிதன் உன்னை 
"கை காட்டி"யாக்கிகொண்டிருக்கிறான்...!

அப்படி என்றால் 
பழிச்செயல்களின் 
மொத்த உருவம் நீதானா...?
வேண்டாம் ஆண்டவா வேண்டாம்,
இந்த பழிச்சொல்...!

வேண்டும் ஆண்டவா வேண்டும்
இந்த  பூமிக்கு நீ வர வேண்டும்,

போதும் ஆண்டவா
போதும்...
இங்கே 
மனிதன் மாமனிதனாக்கபட வேண்டாம் 
மனிதன்...
மனிதனாக இருந்தாலே போதுமானது...!







Post Comment

கிளி

Post Comment

Tuesday, March 27, 2012

வாழ்க்கை

Post Comment

Friday, March 23, 2012

தேசத்துரோகி

Post Comment

Sunday, March 18, 2012

தொ(ல்)லைபேசி



 எங்கோ,
தொலைதூரத்தில் இருப்பவர்களிடம் 
தொலைபேசியில்...
தேவை இல்லாமலேயே 
பேசும் மனிதா...
தேவை இருந்தும் 
அருகில் இருப்பவரிடம் 
பேச மறுக்கிறாயே ஏன்...? 



Post Comment

Thursday, March 15, 2012

பாத்ரூம்



 காம்ப்பவுண்ட் கதவு முதல் 
ஹால் கதவு வரை 
எத்தனை கதவுகள் 
மூடி இருந்தாலும் 
பாத்ரூம் கதவை 
மூடிக்கொண்டு குளிப்பாள் பெண்...!
காம்ப்பவுண்ட் கதவு முதல் 
ஹால் கதவு வரை 
எத்தனை கதவுகள் 
திறந்திருந்தாலும் 
பாத்ரூம் கதவை 
திறந்துகொண்டு குளிப்பான் ஆண்...!

Post Comment

மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!



பெண் பிறந்ததும் திருவிழா...
"சிறுமியாய்" இருக்கையில் 
காதுகுத்து விழா... 
"வயசுக்கு" வந்து விட்டால்,
குடிசைக்குள் விழா... 
கொஞ்சம் நாள் கழித்து 
"மஞ்சள் நீராட்டு" விழா... 
குமரியாய் இருக்கையில் 
"திருமண" விழா...
கருத்தரித்தால் 
"வலையகாப்பு"  விழா...
குழந்தை பிறந்தால் 
"தாய்வீடு" விழா...
இத்தனை விழாக்கள் 
போதாதென்று... 
"மதர்ஸ் டே" யாம்
"மகளிர் தினமாம்..."
இதை நினைக்கும் பொது 
"நான் நின்னா பொதுக்கூட்டம்...
நடந்தா ஊர்வலம் 
படுத்தா பந்த்..." என்கிற 
கானின் வரிகள்தான் என்னை
கடந்து செல்கிறது....! 
பெண் வயசுக்கு வருவதும் 
ஆணுக்காகத்தான்...!
வலையகாப்பு நடத்துவதும் 
ஆணால் தான் என்பதை மறந்த 
இந்த சமூகத்தை எந்த ஆணும் 
குறைகூறவில்லை....
என்னைக்கு நாம் வயசுக்கு வந்தோம் என்று
இன்னும் சிந்தித்த நிலையில்,
ஆண்கள் எல்லோரும் இன்னும் அபலையாக...!
.....................
.....................
என்னதான் இருந்தாலும்,
என்னை பெற்றேடுத்தவளும் பெண்,
என்னுடன் பிறந்தவளும் பெண்,
என் மோட்டார் பைக்கின் பின் சீட் 
காத்திருப்பதும் ஒரு பெண்ணுக்காகத்தான்....!
ஆகையால் சொல்கிறேன்...
"மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!"













Post Comment

Sunday, March 4, 2012

காதலியல்.



 

Post Comment