Total Pageviews

Monday, January 30, 2012

படித்ததில் பிடித்தது....





திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
>
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
>
த்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
>
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
>
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு...ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
>
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
>
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
>
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
>
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
>
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
>
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
>
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
>
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
>
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
>
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
>
அழுவதும்... அணைப்பதும்...
>
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
>
இடைகிள்ளி... நகை சொல்லி...
>
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
>
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
>
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
>
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
>
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> 12
வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
> 4
வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
> 2
வருடமொருமுறை கணவன் ...
>
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
>
இது வரமா ..? சாபமா...?
>
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
>
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
>
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
>
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
>
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
>
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
>
தேவை அறிந்து... சேவை புரிந்து...
>
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
>
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
>
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
>
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
>
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
>
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
>
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
>
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
>
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
>
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
>
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
>
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
>
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
>
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
>
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
>
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
>
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
>
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
>
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
>
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
>
கிழித்துவிடு!
>
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
> (
இல்லையேல் விவாக ரத்து




Post Comment

Sunday, January 8, 2012

மாட்டுக்கறி சாப்பிடகூடாது ஏன்...? ஏன் மாட்டுக்கறி சாப்பிடகூடாது...?









"மாட்டுக்கறி 


சாப்பிடுபவனெல்லாம் மடையன்...
சாப்பிடாதவனெல்லாம் உடையான்...!"
என்றே நினைத்துகொண்டிருக்கிறார்கள் 
நம்மூர் மேதாவிகள்.....!
அப்படி என்றால்...
ஆசியா கண்டத்தில் இருப்பவனும்,
ஆப்பிரிக்கா கண்டத்தில் இருப்பவனும்,
ஏன்...
ஐரோப்பா கண்டத்தில் இருப்பவனும் கூட 
என்ன மடையனா...?
பிறகு என்ன மைத்துக்கு  
மடையன் தயாரிக்கும்
டீசலை, நீ பயன்படுத்துகிறாய்...?
மடையன் தயாரித்த 
ரயில் பெட்டியில் நீ பயணம் செய்கிறாய்...?
கறி சாப்பிட வேண்டுமென முடிவெடுத்துவிட்டால்...
மாடேன்ன....? ஆடென்ன...? 
எல்லாமே உயிரினம் தான். 
பிறகு ஏன்...?
மாட்டுக்கறி மட்டும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்... 
இதற்கு நம் மேதாவிகளின் கருத்து
மாடு கடவுளாம்...!
அதிலும் "எருமை மாடு எமனாம்...!
பசுமாடு சிவனாம்...!
ஏனென்றால் எருமை மாடு கருப்பு(தமிழன்) 
அதனால் தான் எமன்...!
பசுமாடு வெள்ளை(பிராமணர் 
அதனால் தான் சிவன் என்கிறது....
நம் பிராமணர் கூட்டம்...!
வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்டான்....
ஏராளமான பாலம் கட்டினான்...!
சட்ட திட்டங்களை வகுத்தான்...!
அணைகள் கட்டினான்...!
அதே சமயத்தில் சுரண்டியும் கொண்டான்...!
அவன் விட்டு சென்ற இந்த நாடு...
அடுத்து பிராமணர் கையில் தஞ்சம்புகுந்தது. 
"குரங்கு கையில் கிடைத்த பூ மாலையானது நாடு..." 
குருட்டு தனமான சில சட்டம் போட்டான்... 
அது எப்படி...? இது எப்படி...? என்று கேள்வி கேட்டால்... 
கடவுள் என்றான் பதில் சொல்லதெரியாமல்....
இப்படி எதற்கெடுத்தாலும் 
பாப்பான் கூட்டம் கேட்பாரற்று கூத்தடித்துகொண்டிருந்தது...!
"மாட்டை கடவுள் என்றான்...
மனிதனை தீண்டத்தகாதவன் என்றான்...
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று 
நிறம் பார்த்து தரம் பிரித்தான்...
சாம்பலை ''திருநீறு'' என்றான்...
அவன் சாப்பிட வேண்டுமென்பதற்காக  
கடவுளுக்கு ''காணிக்கை கொடு'' என்றான்...
என் சாதத்தை அவன் 
எனக்கே கொடுத்து ''பிரசாம்'' என்றான்...!
நெய்,
பச்சரிசி,
மாவிளக்கு,
பொங்கல்,
வெல்லம்,
எலுமிச்சம்பழம்,
தேங்காய்,
வாழைப்பழமென்று..
இப்படி அவனுக்கு தேவையாதைஎல்லாம்
கடவுளுக்கு என்னை படைக்க சொல்லி...
அவன் கொழுகொழுத்துகொண்டிருந்தான்.

"மாட்டை சாப்பிடக்கூடாது..."
 என்று சொல்பவன் 
எவனுமே மாட்டிற்கு....
ஒரு வேலை புல் கூட போட்டிருக்க மாட்டான்...!
ஏன்....?
தாகம் தீர்க்க கொஞ்சம் 
தண்ணீர் கூட கொடுத்திருக்க மாட்டான்...!
மாட்டை வளர்க்க துப்பில்லாத இவனெல்லாம்....
"மாட்டை கொல்லாதே..." என்று சொல்ல 
என்ன அருகதை இருக்கிறது....?
"வினை விதைத்தவன் தானே 
வினை அறுக்க முடியும்" 
மாட்டை வளர்ப்பவனே....
மாட்டை கொன்றான்...!
இதில் என்ன தவறு இருக்கிறது. 
அடுத்தவன் சாப்பாட்டை பிடுங்கி தின்னும்
உங்கள் கூட்டங்களுக்கு மத்தியில்....
அவன் சாப்பாட்டைதானே அவன் சாப்பிட்டான்....!" 
மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பதற்கு...
மாடு கடவுளும் அல்ல...
ஒரு மண்ணாங்கட்டியும் அல்ல... 

அதற்கு காரணமே வேறு...!
 ஒருகாலத்தில் மனிதன்,
 மிகுந்த வறட்சியால் பாதிக்கப்பட்டான்....
 உண்ண உணவில்லாமல் 
மனிதன் கொத்து கொத்தாக 
செத்துகொண்டிருந்தான்....!
அப்போது சிலர் தன் வீட்டில் இருந்த
விலங்கினங்கள்...
ஆடு, மாடு போன்றவற்றை 
அடித்து சாப்பிடத் தொடங்கினார்கள்...
அப்போது நம் முன்னோர்களில் சிலர் சிந்தித்தனர்...!
ஆட்டையும், மாட்டையும் ஒப்பிடும்போது மாடே 
அதிகமாக பயன் பட்டது மனிதனுக்கு...!
 மாடு உழவு ஓட்ட...
 மாட்டின் சாணம் எருவாக..
 மாட்டின் மூத்திரம் நோய் எதிர்ப்பு சக்தியாக...
 மட்டு பால் நல்ல உணவாக...
 வண்டி இழுக்க...  

இப்படி ஏராளமான வழிகளில் 
மாடு மனிதனுக்கு பயன்பட்டது...!
"மாட்டை கொல்லக்கூடாது...
என்று சொன்ன எவனும்
ஆட்டை கொல்லக்கூடாது.."என்று சொல்லவில்லை.
ஏனென்றால்...
ஆட்டையும்  கொல்லாக்கூடாது,
என்று சொல்லி இருந்தால்...
இன்று இந்தியா முழுவது 
ஆடும், மாடும் தான் வாழ்ந்திருக்கும். 
மனிதன் முற்றிலுமாக மரித்துபோய் இருப்பான்...!

ஆட்டை காட்டிலும், 
மாடே மனிதனின் வாழ்வில் 
அதிகமாக பயன்படுகிறது...!
அதே சமயத்தில்...
ஆடு குறுகிய காலத்தில் 
தன் இனத்தை பெருக்கிக்கொள்ளும்....!
ஆனால் மாடு அப்படி அல்ல...
தன் இனத்தை பெருக்க நீண்ட காலம் தேவைப்படுகிறது. 
ஆடு ஒரே சமயத்தில் மூன்று, நான்கு  
சில சமயங்களில்...
ஆறு குட்டிகள் கூட போட வாய்ப்பிருக்கிறது...!
ஆனால் மாடு ஒரு கன்றை மாட்டுமே ஈனும்... 
மனிதப் பயன்பாடு, கால்நடைகளின் இனவிருத்தி,
இப்படி ஏராளமான காரணங்களை..
முன் வைத்து தான்
"மாட்டை சாப்பிடாதே, ஆட்டை சாப்பிடு..." என்றார்கள் 
நம் முன்னோர்கள். 

இப்படி மனிதனின் தேவைகளோடு ஒன்றிவிட்ட 
இந்த மாட்டை கொன்றோமானால்...
மாட்டின் இனம்
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும். 
நமது அடுத்ததலைமுறைகள் கஷ்டப்படுவார்கள். 
ஆதலால் "மாட்டை கொள்வது தவறு" என்றான்...!
மக்கள் கேட்கவில்லை 
மீண்டும் கொன்றார்கள்...! 
மீண்டும் உரக்க கத்தினான் 
"மாட்டை கொள்வது தவறு"என்று... 
மக்கள் கேட்கவே இல்லை.
மீண்டும் மீண்டும் கொன்றார்கள்...!  
அப்போது மெதுவாக சொன்னான்
"மாட்டை கொள்வது பாவம்" என்று.
ஏன்...? என்று எதிர் கேள்வி எழுப்பினார்கள், 
அப்போது உரக்க சொன்னான்...
"மாடு கடவுளென்று.." 
அப்போதுதான் மனிதன் 
மாட்டை கொல்வதை நிறுத்தினான்...!

இப்படி சொன்ன..
ஒருவனைத்தான் "புத்தன்" 
என்று எல்லோரும் சொன்னார்கள். 
இவன் பின்னே..
போனவர்களை "பெளத்தன்" என்றார்கள். 
இவன் பின்னே 
போகாதவர்களை தலித்(தீண்டத்தகாதவர்கள்) என்றார்கள். 
அப்போதுதான் தலித் உரக்க கத்தினான்...
"நீ செத்தாலும் 
பிறரை வாழவைக்க நினைக்கிறாய் நீ...!
நான் வாழ்ந்தே 
பலரை வாழவைக் நினைக்கிறேன் நான்...!" என்றான்.

"மனிதன் மாட்டை கொல்லக்கூடாது என்று 
 மனிதனுக்கு மனிதனே அறிமுகப்படுத்திய 
ஆயுதம்தான்- கடவுள்.
இந்த காலக்கட்டத்தில்தான் 
சிலர் யார் பேச்சியும் கேட்காமல்...
சியின் காரணமாக மாட்டை சாப்பிடுவதை 
வழக்கமாக்கி கொண்டிருந்தார்கள்...!
இவர்களுக்கு...
அப்போதைய சமூதாயம் 
குத்திய மாபெரும்  முத்திரைதான் தலித்...!
இப்போதெல்லாம்...
அசைவம் சாப்பிடாத சில மேதாவிகள் 
தான் எந்த உயிரையும் கொல்லவில்லை...என்று
தனக்குதானே 
தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்...!
இவர்களை நினைத்து  
நான் சிரிப்பதா...? 
இல்லை அழுவதா...? 
உங்கள் அகராதியில்
விலங்கினங்களை மட்டும்தான் 
உயிரினமா...? 
ஏன்..
தாவரங்கள் உயிரினம் இல்லையா...? 
அப்படியானால் தாவரங்கள் என்னா செயற்கையா...?
 "உயிர்பலி கூடாது..." என்று 
எவன் முடிவேடுக்கிறானோ 
அவன் முதலில் நெல் சோறு 
சாப்பிடுவதை கூட நிறுத்த வேண்டும். 
ஏனென்றால் "நெல்லும்கூட ஒரு உயிரினம் தானே....!" 
இப்போது தனியாக உட்கார்ந்து யோசித்து பாருங்கள்....
மாட்டை சாப்பிடுபவன் மனிதன்தான் என்பீர்கள்...
பைபுலும் குரானும் 
ஏன் பகவத் கீதையும் கூட இந்த காலத்திற்கு
ஏற்றதில்லை என்பீர்கள்...
மனித இனத்தில் 
நெட்டை மனிதன்- உயர்ந்தவன்
குட்டை மனிதன் - தாழ்ந்தவன்...
"இவனை தீண்டாதே" என்பவனின் 
கையை... 
கண்டிப்பாக 
துண்டிக்க 
தோன்றும் உங்களுக்கு...!

இப்படிக்கு ஜாதி, மதங்களை வெறுப்பவன்- செந்தில்பாரதி, கென்யா  




















Post Comment

Saturday, January 7, 2012

வெள்ளிக்கிழமையானால்...

Post Comment

Tuesday, January 3, 2012

"அன்னை" என்கிற சொல்லுக்கு அவலம் ஏற்பட்டுவிட்டது...!









"அன்னை" என்கிற சொல்லுக்கு 
அவலம் ஏற்பட்டுவிட்டது...!
இப்போதெல்லாம் 
இலங்கைக்கு மட்டுமல்ல
இயற்கைக்கும் கூட தமிழனென்றால்
இளக்காரம் தான்....!

அன்று...
அன்னை இந்திராகாந்தி
தமிழனை அடித்தாள்....!
அதற்கு பிறகு...
அவள் மருமகள்
அன்னை சோனியாகாந்தி
தமிழனை அடித்தாள்....!
அடித்துகொண்டிருக்கிறாள்.... 
இப்போது 
அம்மாவும் சேர்ந்து அடிக்க 
ஆரம்பித்துவிட்டாள் தமிழனை...!
இத்தனை அன்னைகளும் 
அடித்தது போதாதென்று...
இப்போது 
நீயும் தமிழனை அடிக்கிறாயே
என் இயற்கை அன்னையே...!

காலில் கன்னிவெடி வைக்கிறான்
இலங்கைகாரன்...!
தலையில் ஏ. கே47  வைக்கிறான்
காஷ்மீர்காரன்....!
தோள்பட்டையில் அணுகுண்டு வைக்கிறான் 
பாகிஷ்தான்காரன்...!
இத்தனைக்கும் மத்தியில்
நாங்கள் உன்னை நினைத்து 
பெருமை பட்டுகொண்டிருந்தபோது...
விலா எலும்பில்
தானாகவே வந்து "தானே புயல்" 
என்கிற பெயரில் குத்துகிறாயே...
நாங்கள் என்ன செய்ய...!

கொஞ்சம்
'கோடை'களுக்கு முன்புதான் 
உன் மூத்த மகளை அனுப்பி
என் குடும்பங்களின் உயிரை
கொத்து கொத்தாக பறித்தாய்...
'சுனாமி' என்கிற பெயரில்...!
இப்போது 
உன் இளைய மகளையும் 
அனுப்பிவிட்டாயோ...?
"தானே போய் பறித்துகொள்
தமிழர்களின் உயிர்களை" என்று சொல்லி
ஏனென்றால் "தமிழன் உயிர்தானே"
என்றென்னிவிட்டாயோ...?
இயற்கையே.... 
உன்னை பெண் என்று 
வர்ணித்தவன்
வாயில் புழுதான் வைக்கும்...!
ஆம்...
இரக்க குணம் படைத்தவள் 
மட்டும்தானே பெண்ணாக முடியும்...
அரக்க குணம் படைத்த நீ
எப்படி பெண்ணாக முடியும்....?
என் குடும்பப் பெண்கள் தாலி தேடி 
கதறி அழுவதுன் 
காதில் கேட்கவில்லையா...? 
இல்லை கேட்டும்
கேட்காமல் இருக்கிறாயா
என் ஊர் அரசியல்வாதிகளைபோல்...?

இத்தனை 
அழிவுகளையும் செய்த 
உன்னை பெண் என்று சொல்வதே பாவம்...
இருந்தும்
உன்னை அன்னை என்கிறார்களே 
அவர்கள் மீதே என் கோபம்...
ஆதால்தான் சொல்கிறேன்
"அன்னை என்கிற சொல்லுக்கு 
அவலம் ஏற்பட்டுவிட்டதென்று...!"


(தானே புயலில் பாதித்த ஒரு பெண்ணின் கதறல்- செந்தில்பாரதி, கென்யா)
















Post Comment

Monday, January 2, 2012

மண்ணில் தெறித்த முத்துக்கள்...(ஒரு விவசாயியின் வாக்குமூலம்)



(ராமநாதபுரம்  மாவட்டத்தில் என்னை பாதித்த ஒரு விவசாயியின் வாக்குமூலம்)



அரசம் பட்டியில் ஓர்,


அரசன்...!
அவன் பெயரிலும்,ஊரிலும் மட்டுமே
அரசன்...!
ஆனால்,
அசலாக அவன் 
அன்னாடங்காய்ச்சி...!
அவனுக்கு 
வலது கையாய் மனைவி,
இரண்டு கண்களாக மகள்கள்...
"சிறு குடும்பம் சீரான வாழ்வு" 
என்பது பொய்த்து போனது அவனுக்கு...!
பாழாய்ப்போன இந்த உலகத்தில்
பஞ்சு மெத்தையில் 
புரல்பவனுக்கு...
பார்க்கும் இடமெல்லாம் நிலமுண்டு,
ஆனால்...
பசியை மறந்து
உழைப்பவனுக்கு 
பார்ப்பதற்கே நிலமில்லை...!
"ஏழையின் சிரிப்பில் 
இறைவன் இருக்கிறான்" என்று
அறிஞர் அண்ணா...
அறிந்தே சொல்லி இருக்கிறார்,
ஏழை சிரிக்க மாட்டான் 
என்பதை மனதில் வைத்து...!
அரசனுக்கோ...
தினக்கூலி என்பதால் 
திருப்தி இல்லை...!
அரைக்காணி நிலம் 
அதை உழுது 
அதிலே நெல் விதைத்து...
நெல்லை தன் 
இரண்டாம் இதையமாக்கினான்...!
களை எடுத்தான்...
தண்ணீர் பாய்ச்சினான்....
உரமிட்டான்....
ஊறுதரும் பூச்சிகளை
அழித்தான்...!
பயிர்களோடு பேசினான்...
பயிர்களோடு சண்டை போட்டான்... 
பயிர்களோடு கோபித்துக்கொண்டான்...
இரவில் 
தன் மனைவியோடு உறங்கியதைவிட 
பயிகளோடு உறங்கியதே அதிகம்...!
சிறுமியாய் இருந்த பயிர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.
ஆம்...
அப்போது பயிர்கள் பூப்படைந்திருந்தது.
அரசன் மனதில்தான் எத்தனை...  எத்தனை... 
ஆசைகள்,
களை எடுக்க அடகுவைத்த 
பொண்டாட்டி தாலிய மீட்கணும்.
இந்த பொங்கலுக்காகவாவது
புள்ளைங்களுக்கு 
புதுத்துணி எடுத்து தரணும்,
காலில் இருக்கும் புண்ணுக்கு 
மருந்து வாங்கணும்....!
கலப்பையை சரி செய்யணும்,
ஆனந்த காண்ணீர் வடித்தான்
பயிர்களை பார்த்து...!
இரட்டை ஜடை போட்டுக்கொண்டு,
தாவணி கட்டிய பெண் 
தலையாட்டினால் எப்படி இருக்கும்...
அப்படித்தான் இருந்தது 
பயிர்கள் காற்றில் ஆடும்போது...!
பட்டாம்பூச்சிகள்
கூட்டம் கூட்டமாக வந்து
கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தன...!
அப்போது....
அப்போது....
அப்போது....
வந்தது வறட்சி...

பூப்படிந்த பெண்ணிற்கு
புது துணி இல்லையா...?
ஆம்...
பூப்படைந்த பயிர்களுக்கு  
புனித நீர் இல்லை....!
ஏரியில் நீர் வற்றியது...
கிணற்றில் தண்ணீர் 
தரையோடு ஒட்டியது...
குளத்தில்
குளிப்பதற்கு நீர் இல்லை...!
குடத்தில்,
குடிப்பதற்கு நீர் இல்லை...!
வாழை மட்டுமல்ல,
கள்ளி செடி கூட
கண்ணீர் வடித்தது...!
கற்களிளெல்லாம்,
தீப்பொறி பறந்தது...!
எங்கும் வறட்சி...
எதிலும்  வறட்சி...
வறட்சி...வறட்சி...
இப்படி பார்க்கும் இடமெல்லாம்
கைகொட்டி சிரித்தது வறட்சி...!
அரசனோ,
ஒரு வாரமாக 
உண்ணவில்லை...
உறங்கவில்லை...
பயிர்களோடு பயிராகி...
படுத்தேவிட்டான்.
அன்று 
இரவு நாடு சாமம்...
லேசான காற்று,
"செல்லாம்மா மண்வாசனை வருதுடி
மழை வரும்ன்னு நினைக்கிறேன்..." என்கிறார்
ஒரு பெரியவர்...!
நின்றது காற்று...
வந்தது தூறல்
இடியையும் மின்னலையும் 
துணைக்கு அழைத்துக்கொண்டு...!
சிறிது நேரத்தில்
மழை கொட்டோகொட்டென்று கொட்டியது,
தவளைகளின்
தம்பட்டமடிக்கும் சத்தம் கேட்கத்தொடங்கின...  
ஏரி, குளம், ஆறுகளெல்லாம்
தான் குடித்து, குளித்தது போக 
மீதமிருந்த நீரை எல்லாம் 
கடலுக்கு அனுப்பி கொண்டிருந்தன...!
அடுத்த நாள் காலை...
டீக்கடையில் சேலைப்பெண்
தொலைகாட்சிபெட்டியில் 
செய்தி வாசித்துகொண்டிருந்தாள்....!
"நேற்று இரவு பெய்த 
மழையின் காரணமாக
மதுரையில் மாநாடு நின்றது....
கோவையில் ஏராளமான 
குடிசைகள் மூழ்கின...
சென்னையில் போக்குவரத்து
ஸ்தம்பித்தது..."
டீ குடித்துகொண்டிருந்த 
அரசன் டீ கிளாசை அப்படியே போட்டுவிட்டு
உரக்க கத்தினான்...
"நேற்று இரவு பெய்தது மழை அல்ல...
அது எங்கள் மண்ணில் தெறித்த முத்துக்கள்..." என்று 











Post Comment