Total Pageviews

Monday, January 2, 2012

மண்ணில் தெறித்த முத்துக்கள்...(ஒரு விவசாயியின் வாக்குமூலம்)



(ராமநாதபுரம்  மாவட்டத்தில் என்னை பாதித்த ஒரு விவசாயியின் வாக்குமூலம்)



அரசம் பட்டியில் ஓர்,


அரசன்...!
அவன் பெயரிலும்,ஊரிலும் மட்டுமே
அரசன்...!
ஆனால்,
அசலாக அவன் 
அன்னாடங்காய்ச்சி...!
அவனுக்கு 
வலது கையாய் மனைவி,
இரண்டு கண்களாக மகள்கள்...
"சிறு குடும்பம் சீரான வாழ்வு" 
என்பது பொய்த்து போனது அவனுக்கு...!
பாழாய்ப்போன இந்த உலகத்தில்
பஞ்சு மெத்தையில் 
புரல்பவனுக்கு...
பார்க்கும் இடமெல்லாம் நிலமுண்டு,
ஆனால்...
பசியை மறந்து
உழைப்பவனுக்கு 
பார்ப்பதற்கே நிலமில்லை...!
"ஏழையின் சிரிப்பில் 
இறைவன் இருக்கிறான்" என்று
அறிஞர் அண்ணா...
அறிந்தே சொல்லி இருக்கிறார்,
ஏழை சிரிக்க மாட்டான் 
என்பதை மனதில் வைத்து...!
அரசனுக்கோ...
தினக்கூலி என்பதால் 
திருப்தி இல்லை...!
அரைக்காணி நிலம் 
அதை உழுது 
அதிலே நெல் விதைத்து...
நெல்லை தன் 
இரண்டாம் இதையமாக்கினான்...!
களை எடுத்தான்...
தண்ணீர் பாய்ச்சினான்....
உரமிட்டான்....
ஊறுதரும் பூச்சிகளை
அழித்தான்...!
பயிர்களோடு பேசினான்...
பயிர்களோடு சண்டை போட்டான்... 
பயிர்களோடு கோபித்துக்கொண்டான்...
இரவில் 
தன் மனைவியோடு உறங்கியதைவிட 
பயிகளோடு உறங்கியதே அதிகம்...!
சிறுமியாய் இருந்த பயிர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.
ஆம்...
அப்போது பயிர்கள் பூப்படைந்திருந்தது.
அரசன் மனதில்தான் எத்தனை...  எத்தனை... 
ஆசைகள்,
களை எடுக்க அடகுவைத்த 
பொண்டாட்டி தாலிய மீட்கணும்.
இந்த பொங்கலுக்காகவாவது
புள்ளைங்களுக்கு 
புதுத்துணி எடுத்து தரணும்,
காலில் இருக்கும் புண்ணுக்கு 
மருந்து வாங்கணும்....!
கலப்பையை சரி செய்யணும்,
ஆனந்த காண்ணீர் வடித்தான்
பயிர்களை பார்த்து...!
இரட்டை ஜடை போட்டுக்கொண்டு,
தாவணி கட்டிய பெண் 
தலையாட்டினால் எப்படி இருக்கும்...
அப்படித்தான் இருந்தது 
பயிர்கள் காற்றில் ஆடும்போது...!
பட்டாம்பூச்சிகள்
கூட்டம் கூட்டமாக வந்து
கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தன...!
அப்போது....
அப்போது....
அப்போது....
வந்தது வறட்சி...

பூப்படிந்த பெண்ணிற்கு
புது துணி இல்லையா...?
ஆம்...
பூப்படைந்த பயிர்களுக்கு  
புனித நீர் இல்லை....!
ஏரியில் நீர் வற்றியது...
கிணற்றில் தண்ணீர் 
தரையோடு ஒட்டியது...
குளத்தில்
குளிப்பதற்கு நீர் இல்லை...!
குடத்தில்,
குடிப்பதற்கு நீர் இல்லை...!
வாழை மட்டுமல்ல,
கள்ளி செடி கூட
கண்ணீர் வடித்தது...!
கற்களிளெல்லாம்,
தீப்பொறி பறந்தது...!
எங்கும் வறட்சி...
எதிலும்  வறட்சி...
வறட்சி...வறட்சி...
இப்படி பார்க்கும் இடமெல்லாம்
கைகொட்டி சிரித்தது வறட்சி...!
அரசனோ,
ஒரு வாரமாக 
உண்ணவில்லை...
உறங்கவில்லை...
பயிர்களோடு பயிராகி...
படுத்தேவிட்டான்.
அன்று 
இரவு நாடு சாமம்...
லேசான காற்று,
"செல்லாம்மா மண்வாசனை வருதுடி
மழை வரும்ன்னு நினைக்கிறேன்..." என்கிறார்
ஒரு பெரியவர்...!
நின்றது காற்று...
வந்தது தூறல்
இடியையும் மின்னலையும் 
துணைக்கு அழைத்துக்கொண்டு...!
சிறிது நேரத்தில்
மழை கொட்டோகொட்டென்று கொட்டியது,
தவளைகளின்
தம்பட்டமடிக்கும் சத்தம் கேட்கத்தொடங்கின...  
ஏரி, குளம், ஆறுகளெல்லாம்
தான் குடித்து, குளித்தது போக 
மீதமிருந்த நீரை எல்லாம் 
கடலுக்கு அனுப்பி கொண்டிருந்தன...!
அடுத்த நாள் காலை...
டீக்கடையில் சேலைப்பெண்
தொலைகாட்சிபெட்டியில் 
செய்தி வாசித்துகொண்டிருந்தாள்....!
"நேற்று இரவு பெய்த 
மழையின் காரணமாக
மதுரையில் மாநாடு நின்றது....
கோவையில் ஏராளமான 
குடிசைகள் மூழ்கின...
சென்னையில் போக்குவரத்து
ஸ்தம்பித்தது..."
டீ குடித்துகொண்டிருந்த 
அரசன் டீ கிளாசை அப்படியே போட்டுவிட்டு
உரக்க கத்தினான்...
"நேற்று இரவு பெய்தது மழை அல்ல...
அது எங்கள் மண்ணில் தெறித்த முத்துக்கள்..." என்று 











Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

1 comment:

  1. indiyavil mattume unavalipavan unavilamal thavikkiraan-vairamuthu muthukkal thodarnthaal paravaillai thane pol puyal varamal avarkal vazhakkaiyilum vilaichchal amokamaaka nadakka ungkal pondra kalaingarkalin kavukal thunai nirakatum indiyavin muthukelumbu nimiratum. naba kalakureenga thodaratum ungakal pani...

    ReplyDelete

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...