Total Pageviews

Friday, December 9, 2011

அன்புள்ள கோடம்பாக்கத்துக்கு ...





1950- களில்...
மக்கள் திரைப்படத்தைக் கண்டு ரசித்தார்கள் என்று சொல்வதை விட திரையை அதிசயத்தோடு பார்த்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
1960- களில்...
மக்கள் திரையில் யார் தோன்றினாலும் அதிசயமாக பார்த்தார்கள்.
1970- களில்...
மக்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி - க்காக படம் பார்க்க சென்றார்கள்... இது எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் 
1980- களில்...
மக்கள் ஒரு கதா நாயகனுக்காக(ரஜினி, கமல் ) தியேட்டருக்கு சென்றார்கள்...இது கதாநாயகர்கள் காலம் 
1990-  களில்...
மக்கள் ஒரு இசை அமைப்பாலருக்காக (A.R. ரகுமான்) தியேட்டருக்கு சென்றார்கள்... இது இசை அமைப்பாளர் காலம்.
2000- களில்...
இவை மொத்தத்தையும் புரட்டிப்போட்டார் "சிம்ரன்".... ஆம் கதாநாயகிக்காகவே 
மக்கள் தியேட்டருக்கு சென்றார்கள்.. இது கதாநாயகிகள் காலம்.

இந்த வரிசையில் இப்போது டைரக்டர்கள் காலம்...
இப்போதெல்லாம் இளைஞர்கள் டைரக்டரின் பெயரை கேட்டுவிட்டு தான் சினிமாவுக்கே போகிறார்கள் 
கோடம்பாக்கத்து இயக்குனர்களே உங்களின் படத்தில் இன்றைய இளைஞனுக்கு...
அதிகமான அறிவுரையும் வேண்டாம்...
அதிகமான ஆடம்பரமும் வேண்டாம்...
கொடூரமான கொலையும் வேண்டாம்...
கொலை செய்யும்  காதலும் வேண்டாம்...

உணவாக சில உண்மைகளையும், அதில் ஊறுகாயாக  சில  கற்பனைகளையும் சேர்த்து படம் இயக்குங்கள்...
நம் ''எங்கேயும் எப்போதும்'' இயக்குனர் போல... 

                                                                            இவண் 
                                                                      கென்யாதமிழன் 
                                                                       செந்தில்பாரதி ..
                                                                   

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...