Total Pageviews

Friday, December 9, 2011

திவ்யாவும்... அவளது நட்பும்...





அது
வசந்த காலம்...
பூக்கள் பூப்பதால்
மட்டுமல்ல...
உன்னை
சந்தித்ததாலும் கூட...!
என் தோழி
தனப்ரியாவால் உன் நட்பு 
கிடைத்தது எனக்கு
தினம் பிரியாக(free)...
நான் வாசித்த
நட்பு புத்தகங்களில்
நான் சு'வாசித்த'
முதல் நட்பு புத்தகம் நீ...!

உலகத்தின்
பெரும் பகுதி
''காதலால்'' ஆனது
என்கிறவர்களுக்கு...
கண்டிப்பாக உன்னைப்போல்
ஒரு தோழி இருந்திருக்க
வாய்ப்பில்லை...!

'பாகற்காய்' பிடிக்காத
எத்தனையோ பெண்களை
பார்த்திருக்கேன் தோழி...
ஆனால்,
பாகற்காய்க்கே  பிடித்த
முதல் பெண் நீதானடி...!

கோவமும்,
விளையாட்டும்
சேர்ந்து முத்தமிடும்
உன் முகத்தை பார்த்து,
சில நேரங்களில் நான்
நகைத்ததுண்டு,
மனதிற்குள்...!




உன் ஸ்கூட்டியின்
பின் இருக்கையால்
என்னை balance
செய்ய முடியவில்லை..
மாறாக...
உன் நட்பு என்னை
சமன் செய்தது...!

உன்னிடம் மன்னிப்பு
கேட்டுகொள்கிறேன்
இப்போதாவது...
ஆம் தோழி
ஒரு நாள் 
உன் புது  சுடிதாரை
உனக்கு தெரியாமல்
முதலில் போட்டு பார்த்தது
நான்தான்...!

உன்னோடு
உறங்கிய கட்டில்..

உன்னை மட்டுமே
போர்த்திகொண்ட போர்வை..

உனது அழகை
ரசித்த உடைகள்...

நீ சாப்பிட்ட தட்டு..

நீ சாப்பிடும் தோரணை...

நீ சமைத்த சமையல்...

உன் சமையலுக்கு
நான் நறுக்கிய காய்கறிகள்...

உன் கூந்தல்
வருடிய சீப்பு...

உன் கனவை
கலைத்த
என் செல்போன் பேச்சு...

நீ ஆசையாய்
வாங்கி கொடுத்த சுடி...

நீ அழகாக
உச்சரிக்கும் 'ங்' ....

எல்லாம் என் கண் முன்
ஆனால்
நீ மட்டும் தொலைவில்...!
ஆம்...! தோழி
என் இதயமும் இதுவரை
துடித்ததில்லை...
உன் செல்போன்
ரிங்டோன் போல..!
ஆனால் இப்போ துடிக்கிறது,
உன் நட்புக்காக...!

பிரியா...
ப்ரியாக கொடுத்ததலோ என்னவோ...
ப்ரியபோகிறாய் நீ...!

கண்மூடி திறப்பதற்குள்
காலம் ஓடிவிட்டது,
ஆனால்
என் நட்பு மட்டும்
விழித்துகொண்டிருக்கிறது...
திருவிழாவில் அம்மாவை
தொலைத்த குழந்தையைபோல்...!
ஒருவேளை
நான் ஆணாக
பிறந்திருந்தால்...
உன்னை,
''கட்டாய காதல் திருமணம்''
செய்திருப்பேன்...!
கடவுளிடம்
பிரார்த்தனை செய்துகொள்கிறேன்..
அடுத்த பிறவியில்
நான் ஆணாக பிறந்தால்...
என் காதலி நீயாக வேண்டும்..
இல்லையேல்...
என் பிள்ளை நீயாக வேண்டும்...
இல்லையேல்...
எனக்கு நீ தாயாக வேண்டும்..

                                          நட்புடன்..
                                          உன்.ராதா  
 (எங்களின் நட்பு காலத்தை கவிதையாக எழுதி தா என்று ராதா என்னிடம் சொல்லி... திவ்யாவுடன் தொடங்கிய நட்பு எப்படி வளர்ந்தது என்று அவள் google chatting மூலமாக என்னிடம் பகிர்ந்தாள் நான் ரதவாகி திவ்யவுக்காக எழுதியது...)
                                

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...