Total Pageviews

Friday, December 9, 2011

கவிஞன்.





முதலில்...
பெண்களின் கண்களில்
காதலைக் கண்டவன்          -கவிஞன்.
காதலை
காதலுக்கே அறிமுகம்
செய்து வைத்தவன்            -கவிஞன்.
இரவில்....
தெருத்தெருவாக சுற்றும்
நிலாப் பெண்ணுக்கு காதலனைத்
 தேடிக் கொடுத்தவன்          -கவிஞன். 
உலக நிகழ்ச்சிகள் அனைத்தையும்
ஒற்றை வார்த்தையில்,
உள்ளங்கையில்
அடக்கிவிடுவான்                 -கவிஞன். 
உள்ளங்கை ரேகைக்கு
உலகளவு,
விளக்கம் கொடுப்பான்      -கவிஞன்.
உண்மையை பொய்யாக்கி,
பொய்யை உண்மையாக்குவான்...!
நிலவுக்கு தாவணி
கட்டி ரசிப்பான்...!
சூரியனை ஜீன்ஸ்
அணியச் சொல்லி மிரட்டுவான்...!
வாத்தைகளை வாக்கியமாக்கி
நடனம் கற்றுக் கொடுப்பான்...!
சகாராப் பாலைவனத்திலும்
சந்தனப் பயிர் செய்ய
முயற்சி  செய்வான்...!
காற்றுக்கு இசையைக்
கற்றுக் கொடுப்பான்...!
கவிதைக்கு தமிழைக்
கற்றுக் கொடுப்பான்...!
கணவன்-மனைவி
இரவு சில்மிஷங்களுக்கு,
சிறப்புக் கட்டுரை
ஒன்று எழுதுவான்...!
வெற்றியால், 
விருந்து கொடுக்க மாட்டன்...!
தோல்வியால்,
துவண்டு  போக மாட்டன்...!
காமத்தில்,
காதலை பார்ப்பான்...!
காதலில்,
நட்பை பார்ப்பான்...!
நட்பில்,
உறவை பார்ப்பான்...!
தண்ணீரோடு பேசுவான்...
தவரங்களோடு சண்டை போடுவான்...
தன்னிலை மறந்து...
தனிமையில் இனிமை காண்பான்...!
ஆம்...
இவுலகத்தின்
ஒவ்வொரு  உயிரினத்தின்
உணர்வையும்
ஒட்டு மொத்தமாக
கற்று வைத்திருப்பவன் கவிஞன்...!
என்னைகேட்டால்....
கடவுளுக்கு அடுத்தபடி
கவிஞன் அல்ல....
கடவுளே கவிஞனுக்கு
அடுத்தபடி என்பேன்...!
                                                      
                                                              கென்யாதமிழன்
                                                                 செந்தில்பாரதி. 

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...