Total Pageviews

Tuesday, December 13, 2011

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...to ASHVATHAAMAN













அன்புள்ள நண்பனுக்கு...

ஆதாமையும் ஏவாளையும்,
ஒருகாலத்தில் வம்புக்கு இழுத்ததால்
உருவான நம் நட்பு...
பள்ளிக்கு
படிக்க வந்தாலும்
படிப்பை  தவிர்த்து..
மற்ற  விஷயங்களை
நாம் கலந்துரையாடியதால்...
வளர்ந்தது நம் நட்பு...
2004- ல்
நாம் இருவரும்
ஒன்றாக பள்ளியில் படித்தோம் 
2005- ல்
நீ 
சென்னையில் படித்தாய் 
நான் 
நெல்லையில் படித்தேன் ....!
2006- ல்
நீ
சென்னையில்  சுற்றினாய்...
நான்
நெல்லையில் சுற்றினேன்...!
2007- ல்
நீ
சென்னையில் வாழ்ந்தாய்...
நான்
நெல்லையில் வாழ்ந்தேன்...!
2008- ல்
நீ
சென்னையில் குடி ஏறினாய்...
நான்
நெல்லையில் குடி ஏறினேன்...!
2009- ல்
நீ இன்னும் சென்னையில்...
நான் ஈரோட்டில்...!
2010- ல்
நீ சென்னையில்...
நான் ஓசூரில்...!
2011- ல்
நீ சென்னையில்...
நான் கென்யாவில்...!
இப்படிதான் 
ஒவ்வொரு ஊராக 
சுற்றிக்கொண்டிருக்கும்போது  
உன் நட்பை என் சட்டைப்பையில்
போட்டு எடுத்துக்கொண்டுதான் சென்றேன்..  
நீ 
பேச்சால் எழுதப்பட நினைக்கிறாய்...!
நான் 
எழுத்தால் பேசப்பட நினைக்கிறேன்...!
பணம் 
பெத்தெடுத்த என் சில 
நண்பர்களுக்கு மத்தியில்...
குணம் 
பெத்தெடுத்த என் 
முதல் நண்பன் நீ தானடா...
"அஸ்வத் பெருத்துட்டான்"
இது மாலதி...
இல்லை... இல்லை....
அஸ்வத் மிகப்பெருத்துட்டான்"
இது மகிமை...
நட்பை மூன்றுவேளை  மட்டுமல்ல 
முழு நேரமாக சாப்பிடும்
அஸ்வத் பெருப்பதிலோன்றும்
ஆச்சரியமில்லையே
என்றேன் நான்...!
"என்னா... சட்டமெல்லாம் 
பேசுற"... என்று என்னை மிரட்டும் 
நண்பர்களிடம் 
நான் சட்டைக்காலரை தூக்கி சொல்வேன் 
ஆம் 
நான் சட்டம் படித்தவனின் 
நண்பனென்று...!
எனக்கு தெரிந்த வரையில்
அம்பேத்காரும்..
அண்ணாவும்...
சேர்ந்து பயணம் செய்த முதல்  
ரயில் பெட்டி....
நம் நட்பாகத்தான் இருக்கும்...!
காலமும், நேரமும் 
யாருக்காகவும் 
காத்திருப்பதில்லையாம்...
நாம் சந்திக்க வேண்டுமென்று
முடிவெடுத்துவிட்டால் 
காலமென்ன, கடவுளும் கூட 
காத்திருப்பார் என்பதை 
நீ அறிவாய் என நினைக்கிறேன்...!
"நல்லதோர் வீணை" செய்கிறாய்...
ஆம்... அது நல்லதோர் "வினை" தான்..!
தொடரட்டும் உன் பணி 
வாழ்த்துக்கள் தோழா...!
     

















Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

1 comment:

  1. உங்கள் நட்பு நலமாக பல்லாண்டு வாழ நானும் ஆசைபடுகிறேன்

    ReplyDelete

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...